உலகப் பெரும் முதலாளியான எலான் மஸ்க்கின் எக்ஸ் தளப் பதிவு ஒன்று பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்தியாவை ஆள்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா? அல்லது பிரபல தொழில் அதிபர்களா? பிரதமர் பதவி மக்கள் சேவைக்கானதா? தொழில் அதிபர்களின் சேவைக்கானதா? அதானி, அம்பானிக்கு அடி பணியும் மோடியின் நடத்தை அமெரிக்க அளவில் கேள்விக்குள்ளாகியுள்ளது; தனது ஸ்டார்லிங் எனப்படும் மிகப்பெரிய மின்தொலை சேவையை சொந்த சாட்டிலைட்டுகள் மூலம் அளிக்கும் எலான்மஸ்க் இந்தியாவில் அத்தகைய சேவையை தொடங்க விண்ணப்பித்து ஐந்து ஆண்டுகளாகியும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய சட்ட ...



















