எஸ்.ராமநாதன், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆத்திகமும், நாத்திகமும் சேர்ந்ததே திராவிட மாடல் ஆட்சி என்கிறாரே அமைச்சர் சேகர் பாபு? பாஜகவும், திராவிடர் கழகமும் கலந்ததே திராவிட மாடல் ஆட்சி எனச் சொல்ல வருகிறாரா…? இன்னும் என்னென்ன உளறல்களை எல்லாம் நாம் கேட்க வேண்டுமோ..? எல்லாம் தினமணி வைத்திய நாதனின் சகவாச தோஷம்! சரவணப் பெருமாள், ஓசூர், கிருஷ்ணகிரி எட்டாண்டு பாஜக அரசின் சாதனை என்ன? வேதனை என்ன? கற்பகதருவான பொதுத் துறை நிறுவனங்களை எடுத்து தனியார்களுக்கு தாரை வார்ப்பது! பண மதிப்பிழப்பு செய்து இந்திய பொருளாதாரத்தை ...