அமெரிக்காவுக்கும், இந்தியாவிற்குமான உறவை பேணுவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சுய மரியாதைக்கும், சுய சார்புக்கும் பாதகமான நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொள்கிறார்! இதை  முறையாக எதிர் கொள்ளத் துணிவின்றி இந்தியா பணிந்து போவதான அறிகுறிகள் கவலையளிக்கின்றன; அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்ட​விரோத​மாக​ குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறது  டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு. இதன் முதல்கட்டமாக  கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சி-17 என்ற ராணுவ விமானத்​தில் நேற்று 104 இந்தி​யர்கள் அமெரிக்​கா​வில் இருந்து திருப்பி  கை மற்றும் ...