”45 மணி நேரம் தியானம் செய்தார் மோடி” என எழுதுகிறார்கள்! உண்மையில் அந்த 45 மணி நேரத்தில் விவேகானந்தர் பாறையில் இருந்து கொண்டு, அவர் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தார்? எத்தனை விவகாரங்களில் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டிருந்தார்? எவ்வளவு ஆடைகளை மாற்றினார் எனப் பார்ப்போமா? ஏழு கட்டமாக நீண்ட நெடிய காலம் எடுத்து தேர்தல் பரப்புரை செய்தும் திருப்தி அடையாத மோடி நுட்பமான முறையில், மிக வலுவான வகையில் செய்த தேர்தல் பிரச்சாரமே விவேகானந்தர் பாறையில் செய்த தியானம் என்ற புராஜெக்ட்டாகும். அதாவது, கடைசிகட்ட ...