உள்ளே போவதற்கு முன்பிருந்த கெஜ்ரிவாலை விட, வெளியே வந்துள்ள கெஜ்ரிவாலின் விஸ்வரூபம் பாஜகவை பயமுறுத்துகிறது! வட இந்தியா முழுமையும் பாஜக அதிருப்தி அலை வீசுகிறது. ‘நிச்சயமாக மோடி அடுத்த பிரதமரல்ல’ என்பதையும், அடுத்த பிரதமர் ரேசில் முந்தத் துடிக்கும் மூவர் குறித்தும் இங்கே பார்ப்போம்; எவ்வளவு முயற்சித்தும், எத்தனை இன்னல்கள் தந்தும், டெல்லியை ஆம் ஆத்மியிடம் இருந்து அபகரிக்க முடியாமல் தோற்றுப் போன பாஜக அரசு, அழித்தொழிப்பு ஒன்றே ஆகச் சிறந்த வழியென்று, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் மிக முக்கிய முன்னணி ...