ஆர்.எஸ்.எஸுக்கும், மோடிக்கும் இடையே என்ன பிரச்சினை? ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மோடி அன் கோவின் மீது தங்கள் அதிருப்திகளை அடுத்தடுத்து வெளிப்படுத்தும் பின்னணி என்ன? ஆர்.எஸ்.எஸ் vs மோடி விவகாரத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய செய்தி என்ன..? பாஜக வின் ஆதார சுருதியான  ஆர்எஸ்எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத் ‘ஆட்சியாளர்களின் அகங்காரம் பற்றியும், அவர்களுக்கு இருக்க வேண்டிய கண்ணியம், கட்டுப்பாடு பற்றியும் பேசியுள்ளது இப்பொழுது நாடெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஆர்.எஸ்.எஸுக்கும் மோடிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் மோடியை உள்ளூர அச்சப்படுத்தி உள்ளது. ...

”சந்தேகமில்லாமல் மீண்டும் பாஜக தான் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று எனப் பேசப்பட்ட நிலைமாறி, ”தற்போது பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை” என்ற பேச்சும், ”தோல்வி பயத்தில் மோடி படு அபத்தமாக பேசுகிறார்” என்பதற்கும் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் – மோடி மோதல் ஒடிக் கொண்டிருக்கிறது; ”மோடி அமித்ஷா கூட்டணிக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் மோதல்” என்பது ஒரு வதந்தி அல்லது எதிர்கட்சியில் உள்ளோர் சிலர் பரப்பும் கட்டுக் கதையாக இருக்கலாம். ஏனென்றால், பாஜகவின் தாய் அமைப்பே ஆர்.எஸ்.எஸ் தான்! பாஜகவின் அடித்தளமே ஆர்.எஸ்.எஸ் தான். ...