இது யூ டியூப் யுகமாக இருக்கிறது. யாரையாவது வம்புக்கு இழுப்பது, அபத்தமான கேள்விகளைக் கேட்பது, மரண வீடுகளில் மைக் பிடிப்பது என ஊடக அறத்திற்குப் புறம்பாக வேலை செய்கிறார்கள் அல்லது செய்ய ஏவிவிடப்படுகின்றனர். தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் பிரபலங்களின் பலவீனம் இவர்களுக்கு மூலதனமாகிறது; நன்மைகளும், தீமைகளும் கலந்து பெருகி வரும் இந்த ‘யூடியூபர்ஸ்’ ஊடக உலகு குறித்த ஒரு அலசல்; சென்னைச் சாலைகளிலோ, பரபரப்பான பொது இடத்திலோ இன்று நாம் அடிக்கடி காணும் ஒரு காட்சி, கையில் ஒரு மைக்கும், ...
















