இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் கூட ஆட்சியாளர்கள் இயல்பு நிலைக்கு வராமல் சதா சர்வ காலமும் சிறுபான்மையினரை எப்படியெப்படி எல்லாம் ஒடுக்கலாம் என ரூம் போட்டு சிந்தித்து சட்டங்கள் போட்ட வண்ணம் உள்ளனர். உ.பியின் முதல்வர் யோகியோ இதில் உச்சம்; உத்திரபிரதேசத்தில் சிறுபான்மையினர் என்றாலே சீற்றப் பார்வையுடன் கூடிய அரசு நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தி வரும் யோகி ஆதித்திய நாத் அவர்களுக்கு இன்னும் சிறுபான்மையினர் குறித்த வெறுப்பும், அச்சமும் அகன்றபாடில்லை. சமீபத்தில் கான்வார் யாத்திரை செல்லும் வழியில் அமைந்துள்ள கடைகளின் ...