‘சுயராஜ் இந்தியா’வின் தலைவரான யோகேந்திர யாதவ் சென்னையின் முன்னணி சமூகச் செயற்பாட்டாளர்களோடு ஒரு உரையாடல் நிகழ்த்தினார். கூர்மையான அறிவாற்றல், பாரபட்சமற்ற பார்வை, எளிமை, நேர்மை ஆகியவற்றின் கலவையாக வெளிப்பட்ட யோகேந்திர யாதவ் பேச்சின் சாரம்சம்; அறப்போர் இயக்க அலுவலகத்தில் ஜுலை -19 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் சமூக இயக்கங்களின் ஆர்வலர்கள் பரவலாக கலந்து கொண்டனர். Making Sense of Indian Democracy: Theory in Practice என்பது போன்ற மக்களாட்சி குறித்த ...