டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவது சர்ச்சையாகி, பொதுத் தளத்தில் கிருஷ்ணாவிற்கு பேராதரவு ஏற்பட்டுள்ளது! பார்ப்பனர்களில் ஒரு தரப்பே கிருஷ்ணாவை ஆதரிப்பதால், அவர் எள்ளளவும் பாதிக்கப்படவில்லை. மாறாக, பெரியார் தாக்கப்படுவது குறித்து தற்போது வரை கிருஷ்ணா கள்ள மெளனம் சாதிப்பது ஏன்? டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்து ஊடகங்களில் கடந்த பத்தாண்டுகளாக முற்போக்காளராக அடையாளம் காட்டப்பட்டும், புகழப்பட்டும் வருகிறார்! திராவிட இயக்கத்தாரும், இடதுசாரி சிந்தனையாளர்களும் அவரை புகழ்கின்றனர். மீனவர் குப்பத்திற்கு சென்று அவர் கர்நாடக இசை கச்சேரி நடத்தியது சர்வதேச அளவில் பெரும் பேசு பொருளானது. அதன் விளைவாக, ராமன் ...