தன்னைச் சுற்றி பின்னப்பட்டு வந்த சூழ்ச்சி வலை குறித்த எந்த பிரக்ஜையும் இன்றி இருந்துள்ளார் ராகுல் காந்தி! ஆனால், அந்தக் கட்சியில் கூட யாரும் சுதாரித்துக் கொண்டு அந்த சூழ்ச்சி வலையை அறுத்தெறியாமல் விட்டனரே! அவதூறு பேச்சையே கிரிமினல் குற்றமாக்கும் சட்டப் பிரிவை நீக்க என்ன செய்ய வேண்டும்..? குஜராத் மாநிலத்தில் சூரத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்றம் (மாவட்ட நீதிமன்றம்) ஏப்ரல் 13 ஆம் நாள் வரும் வியாழக்கிழமை அன்று அளிக்கும் தீர்ப்பில் தான் ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினராக தொடர்வாரா, மாட்டாரா? என்பது ...

வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் சக்தி பாதயாத்திரைகளுக்கு உண்டு என்பது வரலாறு! காந்தி நடத்திய தண்டி யாத்திரை ,சுதந்திரத்திற்கு பிறகு ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகரின் 4,000 கீமீ பாதயாத்திரை, ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டியின் பாதயாத்திரை… என இது வரையிலான பாதயாத்திரைகள் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? ராகுல் காந்தி குறிப்பிட்டது போல நாடு ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது! மனிதாபிமானமற்ற ஆட்சியாளர்களின் கையில் அதிகாரம் சிக்கியுள்ளது! சிறு, குறுந்தொழில்கள் நசிந்து வருகிறது! குறிப்பிட்ட சில பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கவே பாஜக அரசு தன் ...

காங்கிரசில் 50 ஆண்டுகள் பதவி சுகங்களை அனுபவித்தும், கட்சிக்காக எந்த பங்களிப்பையும் செய்யாதவர்  குலாம் நபி ஆசாத்! தொண்டுள்ளம் கொண்டவருமில்லை. தொண்டர் படையைக் கண்டவரும் இல்லை! பாஜகவின் தூண்டுதலால் இன்று காங்கிரசை பலவீனப்படுத்த களம் கண்டுள்ளார்! வெற்றி பெறுவாரா? காங்கிரஸ்காரர்களே  பொறாமைப்படும் அளவிற்கு பல்வேறு பதவிகளையும், வாய்ப்புகளையும் பெற்றவர் குலாம் நபி ஆசாத் ! தற்போது அவர் “காங்கிரஸ் மீள முடியாத பின்னடைவு கண்டுவிட்டது ” எனவே நான் விலகுகிறேன் . காங்கிரசின் இந்த வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியே காரணம் என்ற கடித குண்டை வீசியுள்ளார். ...