ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரசும், பாஜகவும் சமபலத்துடன் போட்டி இடுகின்றன. ஆளும் கட்சியை தோற்கடித்து, ஆட்சி மாற்றம் செய்வது வழக்கமாக உள்ள ராஜஸ்தானில் இந்த முறை காங்கிரஸ் தோற்றுவிடும் என உறுதியாக சொல்ல முடியவில்லை. உட்கட்சி மோதல்களே காங்கிரசை வீழ்த்த வாய்ப்புள்ளது..! இன்றைய முதல்வர் அசோக்கெலாட் சாதாரண நிலைமையில் இருந்து படிப்படியாக கடும் உழைப்பையும், திறமையையும் வெளிப்படுத்தி உயர்ந்தவர். கட்சிகளைக் கடந்து பலதரப்பிலும் நன்மதிப்பை பெற்றவர். சிலபல குற்றச்சாட்டுகள் ஆட்சியின் மீது வைக்கப்பட்டாலும் பாஜகவின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை வந்துவிடவில்லை. இதற்கு காரணம், எளிய ...