சரத்பவார் அஜித்பவார் விவகாரத்திற்கும், ராமதாஸுக்கும் அன்புமணிக்குமான விவகாரத்திற்கும் இவ்வளவு ஒற்றுமைகளா? என்று ஆச்சரியமாக உள்ளது. ‘ குடும்பம் அதிகாரத்தில் இருக்க வேண்டும்’ என்ற ஒற்றை நோக்கத்தால், ‘வாரிசுகளாலே வதைபட்டாலும் ஒன்றிணைவார்கள்’ என்பதையே இவர்களின் வரலாறு சொல்கிறது; தலைவர் எப்படி உள்ளாரோ, அப்படித்தான் அவரது வாரிசும் அச்சுப் பிறழாமல் உருவாகும் என்பதற்கு இந்த இரு அரசியல் குடும்பங்களின் வாரிசுகள் வளர்த்த கிடாவே மார்பில் முட்டிய கதையாக தங்கள் தந்தையையே பலி கொடுத்து, தங்களை வளர்த்துக் கொண்டமை சான்றாகிறது. ”ஊழல்வாதி, கட்சி மாறி, ஓடுகாலி, சந்தர்ப்பவாதி, அதிகார ...
















