மகன் அன்புமணியிடம், அப்பா ராமதாஸின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன? எதைப் பெறுவதற்கு இந்த முட்டல், மோதல்கள்..? நிஜமாகவே இவர்கள் இருவரும் கடுமையாக முரண்படுகிறார்களா..? இவர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் உண்டா? இல்லையா…? இதோ ஒரு அப்பட்டமான ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ ; சுயநலம் மேலோங்கிய ஒவ்வொரு தலைவரும் தன் இறுதி நாளில் இத்தகைய அவமானங்களில் இருந்து தப்ப முடியாது. ஏனென்றால், அவர்கள் எதை விதைத்தார்களோ.., அதைத் தான் அறுவடை செய்து வருகின்றனர். இந்த அருவருக்கதக்க – முற்றிலும் சுயநலமுள்ள இந்த இருவரின் – சண்டை இந்த நாட்டுக்கோ, ...













