ராமர் கோவில் திறப்புவிழா ஆர்எஸ்எஸ்- பாஜகவின் நிகழ்ச்சியாகும். அது சர்வாதிகார அரசியலை வலிமைப்படுத்துகிறது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணமானது, இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக விழுமியங்களை  பேசுகிறது. பரத் நியாய யாத்திரை ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்த விஷயமில்லை..! ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக பிரம்மாண்ட விளம்பரங்கள் செய்து, ஒரு ‘ஹைப்’ ஏற்படுத்தி, ஆட்களை திரட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய நாட்டின் ஜனநாயகம் குறித்தும், அதன் நெறி முறைகள் குறித்தும் நாம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ...

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் காந்தியின் ராம ராஜ்யம் கனவுக்கு உயிர் கொடுத்துள்ளதாம் மோடியின் பாஜக அரசு! காந்தி தீவிரமான ராம பக்தர் தான்!  ஆனால், தற்போது எழுப்பப்பட்டுள்ள ராமர் கோவில் நமது தேசத் தந்தை காண விழைந்த ராமர் கோவிலா? இது தான் காந்தியின் கனவா..? என்பதை பார்ப்போம். முதலாவதாக ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். காந்தி ராம ராஜ்யத்தை விரும்பியவரே அல்லாது, ஒரு போதும் பாபர் மசூதியை இடித்து, அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் எனக் கேட்டதாக எங்குமே வரலாற்றில் ...

மதவெறி அரசியலின் ‘வெற்றி’ அடையாளமாக அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக  திறக்கப்பட உள்ளது. பாபர் மசூதி சர்ச்சையான வரலாறு, அதை காங்கிரஸ் கையாண்ட விதம், இந்துத்துவ அமைப்புகள் வகுத்த வியூகம், நீதி மன்றத்தின் அணுகுமுறைகள் ஆகியவற்றை பின்னோக்கி பார்த்து ஒரு அலசல்; கி.மு. 1550 முதல் இஸ்லாமியர்களுக்கான இறைவனை தொழும் மசூதியாக பாபர் மசூதி இருந்தது என்பதை எந்த நீதிமன்றமும் இந்த நேரம் வரை மறுதலிக்க முடியவில்லை. முதன்முதலில் 1853 ஆம் ஆண்டு ” நிர்மோகி அமோரா” அமைப்பை சார்ந்த சிலர் மசூதி இருக்குமிடத்தில் வழிபாடு ...