ரிங்ஸ்பேஸ்.நெட் எனும் பெயரில் புதிதாக ஒரு இணைய சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது. இன்ஸ்டாவும், சாட்ஜிபிடியும், ஏ.ஐயும் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் 30 வருடத்திற்கு முந்திய வெப்ரிங்ஸ் எனப்படும் வலைமாலை குறித்து பலருக்கும் தெரியாது; அதை மீட்டுருவாக்கம் செய்வது மனிதத்தை மீட்பதைப் போன்றதே; 1990 களின் பிற்பகுதியில் இணையத்தில் பழக்கத்தில் இருந்த ’வெப்ரிங்ஸ்’ எனப்படும் ’வலை மாலை’ கருத்தாக்கத்தை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளதால் கவனத்தை ஈர்க்கிறது. இது பழைய வலை மாலை கருத்தாக்கத்திற்கு மறு வடிவம் கொடுத்துள்ளதோடு, ...














