இப்படியும் படம் எடுக்க முடியுமா? மரணிக்கும் தருவாயிலும் மனிதத்தை உணர்த்தி – தன்னை கொல்லத் துணிந்த காவல்துறையினரை குற்றவுணர்வு மிகுந்து கதிகலங்க வைக்கும் – ஒரு புரட்சிகர கதாபாத்திரம் மெய் சிலிர்க்க வைக்கிறது..! சிங்கள மொழியில் ஒரு உலகத் தரம் வாய்ந்த உன்னத படைப்பு; பல சர்வதேச பட விழாக்களில் விருதுகளை வென்று கொண்டிருக்கும் படம் ரிவஸ்டோன். மனிதம் பேசும் படங்களை எடுப்பதில் கவனம் பெற்றவரான லலித் ரத்ன நாயக்கே இயக்கியுள்ள இந்தப் படம் பார்ப்பவர்களை பல படிகள் மேன்மையாக பயணிக்க வைப்பதாக உள்ளது. ...














