மக்கள் மேடையாம்! மக்களுக்கு சேவை செய்யும் மக்கள் இயக்கமாம்! தலைவர்களை உருவாக்கப் போறாங்களாம். சொல்பவர்களின் யோக்கியதையை பொறுத்து தான் சொல்லப்படும் சொல்லுக்கு மதிப்பு கிடைக்கும். அந்த வகையில் லதா ரஜினிகாந்த் பற்றிய ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்; இதென்னப்பா! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக உள்ளது! பின்ன? லதா ரஜினிகாந்த் எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய துடிக்கிறாங்கன்னா பேரதிர்ச்சி ஏற்படாதா? சில பேரோட ‘நேச்சரே’ மற்றவர்கள் உழைப்பை உறிஞ்சி வாழ்வதாக இருக்கும். அவங்களுக்கு இரக்கம் என்பதே இருக்காது. எப்பவும், பணம், புகழ், சொத்து, சுகம் இதிலேயே குறியாக ...