முறையாக வழக்கு பதியாமல், சம்பந்தப்பட்டவரை கைதும் செய்யாமல் அடியாள் வேலை செய்யத் துணிந்துள்ளனர் தமிழக காவலர்கள். ‘ஒருவன் குற்றவாளியா? அப்பாவியா?’ என்பதை அறிய குறைந்தபட்ச அறிவைக் கூட உபயோகிக்காமல் கொலைக்கு துணிவதா…? ஆட்சித் தலைமை செய்யத் தவறியது என்ன? திருபுவனத்தில் நடந்துள்ள சம்பவம் திகைக்க வைக்கிறது…! என்னே கொடுமை! நெஞ்சு பதைக்கிறது. நிம்மதி இழந்து மனம் வெறுமை அடைகிறது. அடுத்தடுத்து என்பதாக தொடர்ந்து வரக் கூடிய காவல்துறை அநீதிகள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே நம்மை கொண்டு செல்கின்றன. கோவில் விழாவிற்கு வந்த போது காரை உரிய ...