‘லியோ வசூலில் சாதனை படைத்தது ‘என்கிறது தயாரிப்பு நிறுவனம்! ‘எங்களுக்கு லாபமில்லை’ என்கிறது தியேட்டர்கள் தரப்பு! உண்மைகளை ஆராய்ந்தால், பெரிய மாஸ் ஹீரோக்களை வைத்து படமெடுப்பதன் மூலம் பல அநீதிகளும், மெகா சுரண்டல்களுமே பல தரப்பிலும் அரங்கேறுகிறது..!  ‘லியோ படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் 461 கோடி ப்ளஸ்’ என தயாரிப்பாளர் சார்பில் ஒரு விளம்பரம் தரப்பட்டது. இதையடுத்து திரைப்பட உரிமையாளர்களிடம் ”நல்ல கலக்சனாமே…” என பத்திரிகையாளர்கள் கேட்கப் போக, அவர்களோ, பொங்கி தீர்த்து விட்டார்கள்! ”கலெக்‌ஷனுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. நல்ல வசூல் தான்! ...