பிரிட்டனின் பிரதமராக துணிச்சலான பெண்மணி லிஸ் ட்ரஸ் வந்துள்ளார். இவர் இங்கிலாந்து வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் என்றாலும், வலுவான ஆணாதிக்க சூழல்களை மீறி தலைமைக்கு வந்துள்ளார்! இவர் தலைமைக்கு வந்த விதமும், அமைச்சரவை சகாக்களை தேர்ந்தெடுக்கும் விதமும் சுவாரசியமானது! கன்சர்வேட்டிவ்- பழமைவாத- கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ் நான்கு சுற்று உள்கட்சி தேர்தல்களை சந்தித்து வெற்றி வாகை சூடி அதனடிப்படையில் பிரதமர் பொறுப்பு ஏற்றுள்ளார் . நான்கு சுற்று தேர்தல்களிலும் முன்னணி பெற்று இறுதி சுற்றில் இந்திய வம்சாவளியை சார்ந்த ரிஷி ...