கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துவிட்டது. வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிமித்து இருக்கும் உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வாய்ப்புள்ளதா? வக்பு வாரியத்தை இந்த சட்ட திருத்தங்கள் சீர்படுத்துமா? சீரழிக்குமா? மதச் சேவை, கல்வி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக முஸ்லீம் செல்வந்தர்களால் அந்தக் காலத்தில் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துகளை பாதுகாக்கவும், அவற்றை எளியோருக்கு பயன்படுத்தவும் தான் வக்ஃப் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால், நடைமுறையில் அவை தங்கள் நோக்கங்களுக்கு மாறாக அவை இஸ்லாமிய செல்வாக்குள்ளவர்களிடம் ...