பசி, பட்டினி,வறுமை, வேலை இல்லாத திண்டாட்டம் என ஒரு புறமும், உலக பணக்காரர்களுக்கு போட்டி போடக் கூடிய அதானி, அம்பானி போன்ற வளமையான சிறு கூட்டம் மறு புறமுமாக இந்தியா பிளவுண்டு வருகிறது! பணக்காரர்களை மேலும் பணக்கார்களாக்கவும், வறியவர்களை மேலும் வலுவற்றவர்களாக்கவும் ஒர் ஆட்சி நடக்கிறது! 2030 க்குள் உலகத்தில் பட்டினியை ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, ஜெர்மனியைச் சார்ந்த ஒரு அரசு சாரா நிறுவனம், உலகப் பட்டினி குறியீட்டு எண் (Global Hunger Index) என்ற ஒரு அளவுகோளை வருடம்தோறும் வெளியிட்டு வருகிறது. ...