திராவிட இயக்கம் தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்தவர் வள்ளலார். அவருடைய பாடல்களை அச்சிட்டு பரப்பி பெரியாரும், அவர் தம் தொண்டர்களும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார்கள்! அந்த வள்ளலாரின் பெருமைகளை சிதைக்க, சனாதனிகள் திமுக ஆட்சியையே பயன்படுத்துவதை என்னென்பது..? அரவணைத்து அழிப்பதே பிராமணியத்தின் தந்திரமாகும். அந்த வகையில் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமத்தை, ”புதுப்பிக்கிறோம், நவீனப்படுத்துகிறோம்” என்ற பெயரில் அழிக்கின்றனர்.  ”மகாத்மாவின் ஆசிரமத்திற்காக 1,200 கோடி ஒதுக்கி உள்ளோம்” எனச் சொல்லி, பளிங்கு மாளிகையாக – பளபளக்கும் கண்ணாடி கட்டிடமாக – காந்தி ஆசிரமத்தை மாற்றும் ...