மனித உரிமை, பெண்ணுரிமைகளை மீட்கும் சட்டப் போராட்டங்களில் சாம்பியனாக திகழ்பவர் பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்! ஜீவனாம்சம் கோரிய இஸ்லாமியப் பெண் ஷாபானு வழக்கு, சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கான உரிமை போன்ற பல பரபரப்பான, சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகளை நடத்தி வென்றவர். அவர் பத்திரிகையாளர் ரிதுமேனனுடன் நடத்திய சுவையான உரையாடலின் அரிய வரலாற்றுப் பதிவுகள்; இந்திரா ஜெய்சிங் இந்தியாவின் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணாவார். இவர் வாதாடிய வழக்கால் தான் தெருவோர வியாபாரிகள் சட்டம் போன்ற சட்டங்கள் உருவாயின. சபரிமலையில் ...



















