சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலுக்கு வெளியில், சில தினங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞரின் இருசக்கர வாகனம் மீது விசிக தலைவர் திருமாவளவன் கார் மோதியதுடன், அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அவரது இரு சக்கர வாகனத்தை சாலையில் தள்ளி சேதப்படுத்தி உள்ளனர். உயிருக்கு பயந்து ராஜீவ் காந்தி பார் கவுன்சில் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், அந்த அலுவலகத்திற்கு உள்ளேயே அத்துமீறி நுழைந்த வி.சி.கவினர் ராஜீவ் காந்தியை சரமாரியாக தாக்கியதுடன் பார் கவுன்சில் பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். பார் ...