இளையராஜா இத்தனை வயதுக்கு பிறகாவது பெருந்தன்மையையும், பக்குவத்தையும் வெளிப்படுத்த வேண்டும். அவர் தன் பேராசையால் பெருமளவு நட்பு வட்டாரத்தை இழந்தது போதாதா..? திரை இசை பாடல்களுக்கு முழு உரிமை கோரும் இளையராஜா வழக்கு ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது; பல ஆண்டுகளாக திரை இசை பாடல்களுக்கு இளையராஜா முழு உரிமை கோரும் வழக்கில்  நேற்றைய தினமான ஏப்ரல்-24, 2024 அன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் கொண்ட அமர்வு கேட்ட கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. “ பாடலின் வரிகள், பாடலைப் பாடும் ...