எது நடந்தாலும் நல்லதுக்கு நடந்ததாக நினைக்கும் மன நிலை பெற்றால் மட்டுமே இனி இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழ முடியும்! ஆகவே தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு செய்துள்ள அற்புதமான சேவைகளை -, சொல்லப்படாத அரிய சாதனை மற்றும் புதுமைச் செய்திகளை பட்டியலிட்டு பரவசத்துடன் பகிர்கிறோம்; தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் சீராய்வு அறிவிக்கப்பட்ட போது வீடுவீடாக வந்து வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்படும் என்றார்கள். ஆகா, வரட்டும், நல்லதாக போய்விட்டது…என்று அப்பாவி மக்கள் பலரும் காத்திருந்தோம். ஆனால், அப்படி வராமலே ஜீ பூம் பா ஸ்டைலில் ...











