இந்தியாவில் காலடி வைத்திராத எங்கோ பிரேசிலில் வசிக்கும் பெண் லாரிசா நேரி இந்திய வாக்காளர் பட்டியலில் சரஸ்வதி, லஷ்மி, சீமா.. என 22 பெயர்களில் இடம் பெறுகிறார். இந்த தில்லாலங்கடியை சாத்தியப்படுத்த எத்தனை போலி ஆவணங்களை உருவாக்கித் தயார் செய்திருப்பார்கள்..! மிரட்டும் தேர்தல் ஆணையச் சாதனைகள்; இந்திய தேர்தல் ஆணையத் திருவிளையாடல்களை தற்போது இந்த உலகமே வியந்து பார்க்கிறது! இத்தகைய திருப்புகழை இந்தியாவிற்கு தேடித் தந்த கனவான்களை எந்தப் பெயரிட்டு அழைப்பதென்று தெரியவில்லை.! பலே திருடன், பாக்தாத் திருடன், எமகாதகத் திருடன், எதற்கும் அஞ்சாத ...