குடும்ப வாரிசு அரசியல் வெளிப்பார்வைக்கு வெற்றிகரமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் புழுத்து நாறி அழுகி, வெளித் தோற்றத்தில் அழகாகத் தோன்றும் பழம் போன்றதே என்பதற்கு தற்போதைய வரலாறே சாட்சியாகும். ஸ்டாலின் – உதயநிதி, ராமதாஸ் – அன்புமணி, வைகோ –துரை வைகோ போன்ற வாரிசு அரசியலின் போதாமைகளும், பரிதாபங்களும் ஒரு அலசல்; கொள்கை, லட்சியம் சார்ந்து அரசியல் வாழ்க்கைக்கு சுயம்புவாக வந்து சாதித்த தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலுக்கு தயார்படுத்துவதில்லை. அதை கொள்கை, லட்சியம் கொண்ட அடுத்த தலைமுறைக்கு தானாகவே கையளித்து சென்றுவிடுவார்கள் காந்தி, காமராஜ், ...