விஜயகாந்துக்கும், ஊடகங்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமே! ஸ்டார் நடிகராகவோ, முக்கிய அரசியல்வாதியாகவோ அவர் கொண்டாடப்பட்டதில்லை! உயிரோடு இருந்த போது ஊடகங்களிடம் அதிகம் அவமானப்பட்ட விஜயகாந்த், இறந்த பிறகு அதே ஊடகங்களால் அடைந்த முக்கியத்துவத்தை சற்று அலசுவோம்; விஜயகாந்த் இறந்த பிறகு அவர் மீது மக்கள் மனதின் ஆழத்தில் புதைந்திருந்த ஒரு ஈர்ப்பும், அன்பும் பீறிட்டு வெளிப்பட்டது! அதைக் கண்ட ஊடகங்கள் அவரை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி இரண்டு நாட்களாக இடையறாது கவரேஜ் செய்துவிட்டனர்! அவர் இறந்தது முதல் உடல் அடக்கம் செய்யும் வரை ஊடகங்களின் ...
எம்.ஜி.ஆரை முன்மாதிரியாகக் கொண்டு சினிமாவிலும், அரசியலும் ஈடுபட்ட விஜயகாந்த் சினிமாவில் மகத்தான வெற்றியும், அரசியலில் ஒரளவு வெற்றியும் பெற்றார்! சினிமாவில் அவர் தொட்ட உச்சமும், அரசியலில் அவர் தொட முடியாமல் போன உச்சத்தையும் ஆய்ந்து விவாதிப்பதே இந்த கட்டுரை; சினிமாவில் அவர் தொட்ட உச்சம் என்பது வியக்கதக்க ஒன்றாகும். தமிழகத்தின் பிரபல இயக்குனர்களாக அறியப்பட்ட பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்தினம் ஆகிய அனைவராலும் ஒருங்கே தவிர்க்கப்பட்ட விஜயகாந்த், தானே பல புதிய இயக்குனர்களை திரையில் அறிமுகப்படுத்தி, தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர். ...