ஏழட்டு அமைச்சர்கள் கூறிவிட்டனர், விஜய் தான் எதிர்காலப் பிரதமர் என்று! ஏகத்தும் வட மாநிலங்களில் ரீல்ஸ் போடுவதென்ன? கருத்துக் கணிப்பு நடத்துவதென்ன..?  காங்கிரஸை கூட வைத்துக் கொண்டே கழுத்தறுப்பதென்ன…? முதல்வராக உட்கார்ந்தவுடனேயே  பிரதமர் ஆசை துளிர்விட்டதன் பின்னணி என்ன? இந்த சூழ்ச்சியின் பின்னணியில் யார் உள்ளனர்? ”சும்மா தமாஷ் பண்றாங்க” அப்படின்னு கடந்து போகத் தான் நினைத்தேன். ஆனால், ஒருவரையடுத்து ஒருவர் என அடுத்தடுத்து பல அமைச்சர்கள் பேசி வருகின்றனர்…! தமிழகச் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, ​​மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. ...