தமிழகத்தையே நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது தவெக மதுரை மாநாடு. விஜய்யின் அபாரமான மக்கள் செல்வாக்கு கேள்விக்கிடமில்லாமல் நிருபணமாகியுள்ளது. தன்னெழுச்சியாக வந்த மக்கள் பெரும் திரள் ஒரு அரசியல் மாற்றத்தின் தேவையை உறுதிபடுத்துகிறது. அந்த தேவைக்கு தன்னை தகவமைத்துக் கொள்வாரா விஜய்? என்பதே கேள்வி? தற்போதைய தமிழகத்தில் பணம் கொடுக்காமல் இவ்வளவு பெரும் மக்கள் திரளை ஈர்க்கும் இன்னொரு அரசியல் தலைவர் கிடையாது என்பதல்ல, இதில் கால்வாசி கூட்டத்தைக் கூட காசு கொடுக்காமல் வரவழைக்கும் தலைவர்கள் இல்லை. மாலை நடக்கும் கூட்டத்திற்கு அதிகாலை தொடங்கி, தொண்டர்கள் ...













