இந்திய விதை இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வண்ணம் மத்திய பாஜக அரசு விதைகள் மசோதா 2025 ஐ கொண்டு வந்துள்ளது. ‘விதைக்கு விலை வைப்பதே மடமை’ என்ற கோட்பாடுடைய நம் பாரம்பரியத்தை அழித்து, விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் விவசாயிகள் கையேந்துவதை நிர்பந்திப்பதற்கு ஒரு சட்டமாம்; கட்டாயக் கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் ..என்றெல்லாம் பம்மாத்து காட்டி, விதைகளை தனியார்மயமாக்க, ஏகபோகமாக்க, கட்டுப்படுத்த விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் சட்டம் 2025 கொண்டு வரப்பட உள்ளது. விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு தந்து உதவவோ ...













