வினேஷ் போகத் வீழ்ச்சி இயல்பான நிகழ்வல்ல, நிச்சயமாக இதுவே, அவர்களின் விருப்பமாக இருந்துள்ளது. நேருக்கு நேராக வீழ்த்த முடியாத ஒரு நேர்மையான வீராங்கனையை மறைந்திருந்து சதித் திட்டங்கள் தீட்டி, கோழைத்தனமாக சாய்த்துள்ளனர். அம்பலப்பட்டது அயோக்கியத் தனங்கள்.. பாஜகவினர் வினேஷ் போகத் மீது வெறுப்பை உமிழ்வதைப் பார்க்கும் போது, இதற்காகவே சதி திட்டங்கள் அரங்கேறியுள்ளன..என்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு வருகிறது. “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்று விட்டது. நான் தோற்றுவிட்டேன். இனி விளையாட மாட்டேன்” – என வினேஷ் போகத் கூறியுள்ளார். உண்மையில் மல்யுத்தம் அவருக்கு தொடர்ந்து ...