எத்தனை வகையான விமர்சன அம்புகள், அவதூறுகளை வீசினாலும் அவற்றையெல்லாம் தாண்டி, இந்தப் படம் மக்கள் மத்தியில் சென்று மகுடம் சூட்டிக் கொண்டு விட்டது. அறிவு ஜீவிகள் சிலர் பேசுகிற பேச்செல்லாம் காற்றில் கலந்து போய் விடும். அணுவணுவாக ரசித்து, கொண்டாடி மகிழத் தான் எத்தனை அம்சங்கள் இருக்கின்றன..! அமரர் கல்கி இலக்கிய உலகத்தில் கொடி கட்டிப் பறந்தவர். இந்திய விடுதலைப் போராட்ட கால தேசபக்தர். அவர் சாதி, மத,இன, மொழி, வேறுபாடுகளைத் தாண்டி வாழ்ந்த தேசியவாதி. அவர் தமிழர்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்றோ, தமிழ் ...