ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகளின் வாதங்களையும் பொருட்படுத்தாமல் அராஜகமாக வேளாண் மசோதாக்கள் இந்தியப் பாராளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன! இவற்றால் ஏற்படவுள்ள பாதகங்களை, உருவாகப் போகும் பாதுகாப்பற்ற விவசாயச் சூழலைச் சற்றே விரிவாகப் பார்ப்போம்! இந்தியாவில் மிக அதிக அளவில் வேலை வாய்ப்புத் தரும் தொழில் விவசாயம் தான். ஆனால், விவசாயிகள் உட்பட எல்லா இந்தியர்களாலும் மட்டமாக மதிக்கப்படுவதும் விவசாயம் தான்.காரணம் விவசாயிகள் உழைப்புக்கும், விளை பொருளுக்கும் உரிய மரியாதை இல்லாமல் போனதே! ஆனால் இந்தியாவின் விவசாய வரலாறு என்பது வேறு விதமானதாக ...

எந்த ஒரு திட்டத்திலும் யார் பலன் பெறத் தகுதியானவர்கள்,தகுதியற்றவர்கள் என்பது வேளாண் அதிகாரிகளுக்கு துல்லியமாகத் தெரியும்! ஆனால்,மோசடி செய்வதற்கென்றே கொண்டு வரப்பட்ட திட்டமாக இதை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் நினைத்து செயல்பட்டதாகத் தான் தெரிகிறது இந்த திட்டத்தின் மூலகர்த்தா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்! அவர் தான், தன் தேர்தல் வாக்குறுதியில் சிறு,குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு நான்காயிரம் இலவசமாக தரப்படும் என அறிவித்து ஆட்சியைக் கைப்பற்றினார். இதைத் தான் மோடி தேர்தலுக்கு முன்பே கொடுத்து அடுத்த ஆட்சிக்கு அடித்தளம் போடும் எண்ணத்துடன் அறிவித்தார். சென்ற ஆண்டு ...