பாஜக ஆட்சியில் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு உரியவிலை நிர்ணயிக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தனர் ஆனால்,உச்சபட்ச கொடுமையாக விவசாயிகளையே முதலாளிகள் விலை பேசிவிட தோதாக மூன்று மசோதாக்களை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. எதிர்கட்சிகளோடு பாராளுமன்றத்தில் விவாதிக்கவோ, தவறுகளை திருத்திக் கொள்ளவோ மத்திய அரசு முற்றிலும் விரும்பவில்லை! மாநிலங்களவையில் 12 கட்சிகள் பதறின..,கதறின..எதுவும் நடக்கவில்லை! சஸ்பெண்டானவர்கள் வெளியில் அமர்ந்து இரவுபகலாக போராடினர். தற்போது 18 கட்சிகள் ஜனாதிபதிக்கு இந்த மசோதாக்களை ஏற்காமல் பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் நடப்பதற்கு வாய்ப்பு ...