சிப்காட்டிற்கு நிலம் தரமறுத்த விவசாயி கன்னியப்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தையே திகுதிகுக்க வைத்துள்ளது. தொழில் அதிபர்களுக்கு நிலம் தருவதற்கு மறுத்தால் கொலையும் செய்யும் அரசாங்கம் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவத்தை பார்க்கிறோம் என்கிறார், உழவர் உரிமை இயக்கத்தின் அருள் ஆறுமுகம்; இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது. விவசாயமே நமது நாட்டின் உயிர் நாடியாக உள்ளது என்றார், மகாத்மா காந்தி. ஆனால், தொழிற்சாலைகளை அதிகரிக்க, விவசாயத்தை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதற்கு ஏற்ப இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஏற்கனவே ...













