நகர்ப்புற வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்பதாக விவசாய நிலங்களையும், நீர் ஆதாரங்ளையும் எந்தக் கேள்வியுமின்றி தூக்குவதற்கு புதிய, புதிய சட்டங்களை ஒவ்வொரு ஆட்சியும் கொண்டு வருகின்றன. பரந்தூரில் விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த தவெக அரசு, தற்போது பரந்துபட்ட தமிழகத்தையே பாலைவனமாக்க ஒரு சட்டமசோதா கொண்டு வரலாமா? தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 1, 2026 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பி. ராஜ்குமார், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்ட திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா, ‘நன்செய் நிலங்கள் மற்றும் ...














