விவசாயிகளையும், விவசாயத்தையும் ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில்  மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள் தருவதாக சொல்கின்றன! இப்படி பல்லாயிரம் கோடிகள் விவசாயிகளுக்கு தரப்படுவதாக சொல்லப்பட்டாலும், விவசாயிகள் ஏன் வறுமையில் உழல்கிறார்கள்..? இந்தியாவில், ‘விவசாயிகளுக்கு அள்ளித் தருகிறோம்’ என்ற கணக்கில் பல ஆயிரம் கோடிகள் விவசாய மானியங்களாக கணக்கு காட்டப்படுகின்றன! இவ்வளவு கோடிகள் தந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் சொன்ன போதிலும், நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக ஏன் மாறிக் கொண்டிருக்கிறது? இந்த நாட்டில் வரலாறு நெடுக பார்த்தோமென்றால், விவசாயிகள் தரும் ...