கடைசி கட்ட வாக்கு பதிவு நடக்கும் நாளன்று விவேகானந்தர் பாறை மீது மோடி தியானம் செய்யும் காட்சிப் படிமம் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாவதே ஒரு நுட்பமான தேர்தல் பிரச்சார உத்தி தான். ஆனால், மதவெறி மனிதன், மனித நேயத்தின் உச்சமான ஆன்மீகத் துறவியைத் தன் அரசியல் பகடைக் காயாக்குவதா? தமிழ் நாட்டின் தென்கோடி ஊரான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி தற்போது கலவரப்பட்டு கிடக்கிறது. பாதுகாப்புக் கெடுபிடிகளால் பொதுமக்களின் நடமாட்டங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. காபந்து சர்க்காரின் பிரதமராக ...