யோகா பயிற்சி, தியானப் பயிற்சி, உடற்கல்வி ..என பல வழிகளில் அரசு பள்ளிக்குள் சனாதன சக்திகள் கடந்த ஓராண்டாக நுழைந்த வண்ணம் இருக்கின்றனர் என ஆசிரியர்கள் சொல்லி வந்த போது அலட்சியம் காட்டப்பட்டது. இன்று கண்ணொளி இல்லா ஆசிரியரின் துணிச்சலால் உருவான காணொளி அம்பலப்பத்திவிட்டது; அசோக் நகர் அரசு பள்ளியில் ஆதிக்க சக்திகள் நடத்திய சம்பவம் வெளியில் தெரிய வந்ததால் இவ்வளவு பரபரப்பு! கடந்த ஓராண்டாகவே இது போல தமிழகம் முழுக்க பல பள்ளிகளில் சில அமைப்பினர் கல்வித் துறை அனுப்பியதாக யோகா பெயரிலும், ...