விஷச் சாராயம், கள்ளச் சாராயம், டாஸ்மாக் மது மூன்றிலும் ஆட்சியாளர்களுக்கு உள்ள தொடர்புகள் என்ன? அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர், லோக்கல் பிரமுகர்கள் அனைவரும் சேர்ந்து அரங்கேற்றிய படுகொலை அம்பலப்படுமா? மெல்லக் கொல்வது டாஸ்மாக் மது. உடனே கொல்வது விஷச் சாராயம் கள்ளக் குறிச்சி கருணாபுரத்தில் நடந்துள்ள விஷச் சாராயச் சாவுகள் நெஞ்சை உலுக்கி எடுக்கின்றன! சாவு எண்ணிக்கை 40 தைக் கடந்து 50 ஐ நோக்கிச் சென்று கொண்டுள்ளது! இது தவிர நூற்றுக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் குற்றுயிரும், குலை உயிருமாய் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கண் ...