கேரளாவில் முதல் அமைச்சரை தேர்ந்தெடுக்க காங்கிரசில் நடந்த உச்சகட்ட உள்கட்சிப் போராட்டம் 10 நாட்கள் நீடித்து ஓட்டுப் போட்ட மக்களை சங்கடப்படுத்தியது. உள்கட்சி ஜனநாயகத்தை உதாசீனப்படுத்தி, முதல்வர் பதவிக்கு டெல்லி மேலிடத் திணிப்பு நிகழ்ந்ததை இறுதியில் உள்ளூர் காங்கிரஸார் வீழ்த்தியது வரலாற்று முக்கியத்துவமானது; இந்தியாவிலேயே படித்தவர்களை அதிகமாகக் கொண்ட மாநிலம் கேரளம். அதே போல முஸ்லீம்களும், கிறிஸ்த்துவர்களும் அதிகமாக வாழும் இடம். இயற்கையை நேசிக்கும் மக்கள், எளிமையாக வலம் வரும் தலைவர்கள், பண விநியோகம் இல்லாத தேர்தல் நடக்கும் மாநிலம் என பல சிறப்புகளைக் ...