வீராணம் ஏரி, கடலூர் மாவட்ட காவேரி டெல்டா விவசாயிகளின் கருவூலமாகும். சென்னைக்கு தண்ணீர் தரும் தாய்மடியாகும். கடல் போல காட்சியளிக்கும் இந்த ஏரி, இன்றைக்கு  தண்ணீர் இன்றி, வறண்டு கிடக்கிறது! மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் நீர் ஆதாரம் நிர்மூலம் ஆனதற்கான காரணங்கள் என்ன? வீராணம் ஏரி என்பது தென்னாற்காடு மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரமாகும். கடலூர் மாவட்டத்தில் நாட்டார் மங்களத்தில்  உள்ள வீராணம் ஏரி,  காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார் கோவில், சிதம்பரம், புவனகிரி, சேத்தியாதோப்பு பகுதிகளில் உள்ள பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ...