சமகாலத்தின் மையப் பிரச்சினையான பெரு நிறுவனங்களின் கனிம வளக் கொள்ளை, தீவிரவாதம், பழங்குடிகளுக்கு எதிரான போலீஸ் அடக்குமுறைகள், ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சினிமா தான் விடுதலை. வெற்றி மாறன் இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்? கதைக் களத்திற்கான தேர்வு, கதாபாத்திரங்களின் தேர்வு, காட்சிகளின் வழியே விரியும் சினிமா மொழி.. ஆகியவற்றில் வெற்றி மாறன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், கலையின் நோக்கம் தான் முக்கியமானது! படத்தின் ஆரம்பமே தமிழர் படை வைத்த வெடி குண்டால் ரயில் கவிழ்ந்ததாகக் காட்டப்படுகிறது. அதுவும் இந்தக் காட்சி தேவையின்றி ...