வாக்கு திருட்டால் அதிகாரத்திற்கு வந்து, வக்கற்ற நிர்வாகத்தால் மக்கள் அதிருப்தியை பெற்றதை மறைக்க, போராடுவோர் எல்லோரையும் தேச விரோதிகள், அந்நிய நாட்டின் உதவியை பெறுவோர்கள் என்பதா? மோடியின் அஸ்திவாரமே அந்நிய நாட்டு உதவியால் போடப்பட்டது தானே? விவாதிக்கத் தயாரா? என்றால், விதிர்விதித்து ஓடுகிறார்! 1993- ல் அமெரிக்காவுக்கு மோடி ஏன் சென்றார்? எந்த நிதியில் சென்றார்? எதிர்கட்சிகளை இந்திய எதிர்ப்பு சக்திகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள், ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று யாரை சந்திக்கிறார்,யாருடன் ஆலோசிக்கிறார், யாருடைய தூண்டுதலில் என்னை அவதூறு ...


















