நிலத்தை பறித்து, நிர்கதியாக்கி சொந்த மண்ணின் மக்களை அகதிகளாக்கவா நமக்கு சுதந்திரம் கிடைத்தது?  அதானிக்காக 5,746 ஏக்கர் நிலங்களை அபகரிப்பதா? 700 நாட்களாக  எளிய மக்கள் நடத்திய அகிம்சை போராட்டத்தை யாரும் பொருட்படுத்தவில்லையே..?  மனிதாபிமானம் தொலைத்தோமோ..? என்ன தான் தீர்வு..? தமிழக மண்ணில் வாழும் மனசாட்சியுள்ள ஒவ்வொருவர் மனதையும் பதைபதைக்க வைக்கிறது இந்த அறிவிப்பு! பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 700 நாட்களாக தொடர்ந்து  போராடி வருகின்றோம். விவசாயத்தையும், நீர்நிலைகளையும்  காக்க  போராடி வரும் விவசாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல்  நில ...