வேங்கைவயல் தமிழ்நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு அந்நிய நாடாகிவிட்டதா? அந்த ஊர் ஏன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது? எதற்கு இத்தனை காவல்துறையினர் குவிப்பு? அந்த மக்களை சந்திப்பதற்கு ஏன் தடை?.அந்த மக்கள் மற்றவர்களோடு பேச முட்டுக்கட்டை ஏன்..? உண்மையை மறைக்க இன்னும் எத்தனை அதிகார ஆட்டம் ஆடுவீர்கள்..? பாதிக்கப்பட்ட மக்கள் யார் மீது புகார் தந்தார்களோ, அந்த மனிதரை நெருங்கவும் இந்த அரசுக்கு துணிவில்லை. தங்களின் பாதிப்பை வெளி உலகிற்கு எடுத்துச் சொன்ன தங்கள் வீட்டுப் பிள்ளைகளையே குற்றவாளியாக்கி இருக்கும் அரசின் அநீதிக்கு எதிராக அந்த மக்கள் கொந்தளித்துள்ளனர். ...